Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
‘டெல்லி சலோ’ போராட்டத்தில் விவசாயிகள் மீது நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தது. இப்பேரணிக்கு ‘டெல்லி சலோ’ எனும் பெயரிடப்பட்டது.
கடந்த நவம்பர் 27 ஆம் தேதி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டபோது போலீசார் நீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை வீசியும் தடுக்க முற்பட்டனர்.
சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்தைக் கண்டித்து பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களும், தமிழக இளைஞர் காங்கிரஸும் இசம்பவம் குறித்த தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பதிவு செய்கையில், கூடவே போலீசார் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சு அடிக்கும் புகைப்படம் ஒன்றையும் இவர்கள் பகிர்ந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள இப்புகைப்படம் உண்மையிலேயே ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் எடுக்கப்பட்டதுதானா என்பதை அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம் உண்மையிலேயே ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் எடுக்கப்பட்டதுதானா என்பதை அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு ஆய்வு செய்ததில் இப்புகைப்படம் டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலைக்குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைககளை முன்னிறுத்து ‘கிசான் கிராந்தி பாத யாத்ரா’ எனும் பெயரில் போராட்டம் ஒன்று நடைப்பெற்றது.
அப்போராட்டத்தின்போது விவசாயிகளைத் தடுத்து நிறுத்த கண்ணீர் புகை, மற்றும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்டப் புகைப்படமே தற்போது சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வு குறித்து தி இந்துவில் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. அதில் வைரலானப் புகைப்படம் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிகிறது.

இதன்மூலம் விவசாயிகள் மீது நீர் பீய்ச்சு அடிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம், உண்மையில் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல எனும் உண்மை நமக்கு தெளிவாகிறது.
டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் மீது நீர் பாய்ச்சி அடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் தவறானது என்பதையும், உண்மையிலேயே அது 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ‘கிசான் கிராந்தி பாத யாத்ரா’ போராட்டத்தில் எடுக்கப்பட்டதென்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
T. Velmurugan: https://www.facebook.com/velmurugantvkparty/posts/10160490709898835
Tamilnadu Youth Congress: https://twitter.com/TN_PYC/status/1331889853143740420
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 6, 2024
Ishwarachandra B G
February 27, 2024
Vasudha Beri
February 26, 2024