Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்ததாக முதியவர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏறக்குறைய 40 நாட்களுக்கு மேலாக கடுங்குளிர், மழை என எதையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட முதியவர் ஒருவர் இறந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தில் இருப்பவர் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்தானா என்பதை அறிய, இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இதுவரை டெல்லி போராட்டத்தில் கலந்துக்கொண்ட விவசாயிகளுள் அறுபதுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் இருக்கும் முதியவர் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்தானா என்பது சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. ஆகவே சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரவும் இப்புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

அப்பதிவில், போரி சௌக் தாரா தன் பகுதியில் ஏறத்தாழ 70 வயதுடைய முதியவர் ஒருவரின் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாகவும், இவரின் குடும்பத்தாரை சேரும் வரை இதை மற்றவருக்கு பகிரவும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்பதிவின் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் இருக்கும் முதியவர் விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர் அல்ல என்பது தெளிவாகிறது.
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்ததாக பரவும் புகைப்படப்படத்தில் இருக்கும் முதியவர் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழக்கவில்லை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/rpsenthilas/posts/5474833452530600
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=518840375242863&id=300796847047218
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 6, 2024
Ishwarachandra B G
February 27, 2024
Vasudha Beri
February 26, 2024