Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ரஷ்யா நிலநடுக்கத்தின் வீடியோவா இது?
ரஷ்யா நிலநடுக்கத்தின் வீடியோ என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ தவறானதாகும். மியான்மரில் கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.

அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டாரா?
நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டதாக பரப்பப்படும் நியூஸ்கார்டானது எடிட் செய்து மாற்றப்பட்ட போலியான நியூஸ்கார்டாகும்.

சாட்டை துரைமுருகன் கடற்கரையில் நடனமாடியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
சாட்டை துரைமுருகன் கடற்கரையில் நடனமாடியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.