இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

சீமான் திரைப்படப் பாடல் ஒன்றில் பின்னணி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
சீமான் திரைப்படப் பாடல் ஒன்றில் பின்னணி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ போலியானதாகும்.

உத்தரகாண்டில் நிவாரண பணிகளை செய்ய JCB எந்திரம் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டதாக பரவும் படம் உண்மையானதா?
உத்தரகாண்டில் நிவாரண பணிகளை செய்ய JCB எந்திரம் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

மேகவெடிப்பு நேரடிக்காட்சி என்பதாகப் பரவும் வீடியோ உண்மையானதா?
மேகவெடிப்பு நேரடிக்காட்சி என்பதாகப் பரவும் வீடியோ AI மற்றும் VFX மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.

ராமதாஸ் படத்துடன் ‘If you are Bad; I am your Dad’ என்கிற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்தனரா பாமக தொண்டர்கள்?
பாமக தொண்டர்கள் ராமதாஸ் படத்துடன் ‘If you are Bad; I am your Dad’ என்கிற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்ததாக பரப்பப்படும் படம் தவறானதாகும்.

வாக்கு திருட்டு சர்ச்சை; பாஜக MLA நந்த் கிஷோர் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டாரா?
வாக்கு திருட்டு சர்ச்சை தொடர்பாக பாஜக MLA நந்த் கிஷோர் குர்ஜார் சாகிபாபாத் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.