Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் இருப்பவர் இன்றைய நிர்வாகியான கவிதா சிங் ஆவார்.

காவ்யா மாறன் பெரியாரை திருமணம் செய்திருப்பேன் என்று கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
காவ்யா மாறன் பெரியார் உயிருடன் இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன் என்று கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

சிக்கந்தர் மலை மேல் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என வக்பு தலைவர் சர்ச்சை பேச்சு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
சிக்கந்தர் மலை மேல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும், ஆடுகோழி வெட்டி சமபந்தி விருந்து எனவும் வக்பு வாரியத்தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.


தேர்தல் நாளில் முஸ்லீம் வாக்காளர்களுக்கு சிறப்பு சலுகைகள் கேட்டாரா கெஜ்ரிவால்?
தேர்தல் நாளில் முஸ்லீம் வாக்காளர்களுக்கு சிறப்பு சலுகைகள் தரக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை எடிட் செய்தே இந்த பொய் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.