ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

மாஸ்க் அணிந்துகொண்டு உணவு சாப்பிடாமல் புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி?

மாஸ்க் அணிந்து கொண்டு அமர்ந்து, இலையில் இருப்பதை சாப்பிடாமல் ஈரோட்டில் ராகுல் காந்தி புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டார் என்று பரவும் செய்தி தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா நினைவிடம் குறித்து இப்படிக் கூறினாரா?

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இப்படி ஒரு சிறப்பான நினைவிடம் அமைத்திருக்க முடியாது என்று கூறியதாகப் பரவும் செய்திப் புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன் என்றாரா சீமான்?

“வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன்” என்று தொண்டர்களை சீமான் எச்சரித்ததாக சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ஜெயக்குமார் அவர்கள் கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர்கள் அதிமுகவினர் அல்ல என்றாரா ?

 “கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல, உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

குடியரசு தினக் கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

குடியரசு தினத்தன்று விவசாயப் பேரணியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பாஜகவினர்தான் காரணமென்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அப்புகைப்படம் 2014 ஆம் எடுக்கப்பட்ட பழையப் புகைப்படமாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular