Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

திருப்பதி கோவிலில் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
திருப்பதி கோவிலில் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் நிகழ்ந்த விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் நிகழ்ந்த விபத்து என்று பரவும் வீடியோ மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவமாகும்.

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

வங்கதேசத்தில் இந்து ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் இந்து ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

சிவகங்கை லாக் அப் மரணம்: ஸ்டாலின் ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்; ஈபிஎஸ் ஆட்சி மரணம் இன்னும் விசாரணையில்தான் உள்ளது என்றாரா சீமான்?
ஸ்டாலின் ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மரணம் இன்னும் விசாரணையில்தான் உள்ளது என்று திமுகவுக்கு ஆதரவாக சீமான் பேசியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.