Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியினரால் தாக்கப்பட்டாரா?
கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியை சாந்தவர்கள் போலீசார் முன்னிலையில் அந்நபரை தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாரா விஜய்?
ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு தவெக தலைவர் விஜய் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

தவெகவில் IRS அதிகாரி அருண் ராஜூவிற்கு இடமில்லை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
தவெகவில் IRS அதிகாரி அருண் ராஜூவிற்கு இடமில்லை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன்… வைரலாகும் சம்பவம் திமுக ஆட்சியில் நடந்ததா?
திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை மகன் வெட்டியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய ரஃபீக் உசேன் பதுக் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய ரஃபீக் உசேன் பதுக் என்று பரவும் புகைப்படச்செய்தி தவறானதாகும்.