Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜனுக்கு ஞானசேகரனுடன் தொடர்பு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜனுக்கு ஞானசேகரனுடன் தொடர்பு என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு முன் பயணி வெளியிட்ட வீடியோவா இது?
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு முன் பயணி வெளியிட்ட பேஸ்புக் லைவ் வீடியோ என்று பரவும் வீடியோ 2023 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர்களின் கடைசி வீடியோவா இது?
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா குழுவினரின் கடைசி வீடியோ என்று பரவும் காட்சி தவறானது; அந்த விபத்துடன் தொடர்புடையது அல்ல.

சிறுமியைக் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் என்று பரவும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததா?
சிறுமியைக் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் என்று பரவும் வீடியோ கர்நாடகாவில் நடைபெற்றதாகும்.

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் தகவல் உண்மையானதா?
கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.