ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரினாரா?

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி கோரியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியைச் சந்திக்க சென்ற கார் டயரின் அடியில் திருஷ்டிக்காக எலுமிச்சை பழம் வைத்து இருந்ததாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?

இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!? வைரலாகும் புகைப்படங்கள் உண்மையானதா?

மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவித்ததாக கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் இப்படங்கள் உண்மையில் எடிட் செய்யப்பட்டவையாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

நல்லி எலும்பு புகைப்படத்தை கிஷோர் கே சாமி கைது நியூஸ் கார்டில் பயன்படுத்தியதா சன் நியூஸ்?

நல்லி எலும்பு புகைப்படம் ஒன்றினைக் குறிப்பிட்டு கிஷோர் கே சாமி கைது செய்தியை பிரபல தொலைக்காட்சி நியூஸ் கார்டாக வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular