இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தள்ளிவிட்ட மாணவி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

சீமான் கருத்தியல் ரீதியாக பேச மாட்டார்; தனிநபர் தாக்குதல் மட்டுமே செய்வார் என்று காளியம்மாள் கூறினாரா?
சீமான் கருத்தியல் ரீதியாக பேச மாட்டார்; தனிநபர் தாக்குதல் மட்டுமே செய்வார் என்று காளியம்மாள் கூறியதாக பரப்பப்படும் வீடியோத்ததகவல் தவறானதாகும்.


தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா பேசினாரா?
தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா பேசியதாக பரவும் நியூஸ்கார்டானது முற்றிலும் போலியானதாகும்.