Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் கடந்த ஆண்டு வெளியாகிய செய்தியாகும்.

நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை தொடங்கியதா மத்திய அரசு?
இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை மத்திய அரசு தொடங்கியதாக பரப்பப்படும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கு தவறானதாகும்.

பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்று பரவும் அட்டவணை உண்மையா?
பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியல் என்று பரவும் அட்டவணை போலியானதாகும்.

பஹல்காம் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டதாக பரவும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.