Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ காட்சி ஒரு வீடியோ கேம் காட்சியாகும்.

செனாப் நதியை மீண்டும் திறந்து பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?
செனாப் நதியை மீண்டும் திறந்து பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ ஆப்கானிஸ்தான் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் காட்சி என்று பரவும் வீடியோ காசாவில் நடைபெற்ற தாக்குதலுடன் தொடர்புடையதாகும்.

இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ உண்மையானதா?
இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரப்பப்படும் தகவலும் தவறானதாகும்.

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையானதா?
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.