இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்ததாக பரவும் படம் உண்மையானதா?
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்ததாக பரவும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் இறந்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

லாகூர் சிதறிய காட்சிகள் என்று தந்தி டிவி வெளியிட்ட வீடியோ உண்மையா?
லாகூர் சிதறிய காட்சிகள் என்று தந்தி டிவி வெளியிட்ட வீடியோ பிலடெல்பியா விமான விபத்துடன் தொடர்புடையதாகும்.

RSS ஆதரவாளர்கள் புர்கா அணிந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனரா?
கர்நாடகாவில் RSS ஆதரவாளர்கள் புர்கா அணிந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இஸ்லாமியர்களை அடித்து துவைத்த போலீசார் என்று பரவும் வீடியோ உண்மையா?
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இஸ்லாமியர்களை அடித்து துவைத்த போலீசார் என்று பரவும் வீடியோ செய்தி தவறானதாகும்.