Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமர இடம் ஒதுக்கியதாக பரவும் தகவல் உண்மையா?
திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பவளவிழாவில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தாரா?
எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் ஈபிஎஸ் மீது விழுந்தது செருப்பு அல்ல; செல்போனாகும். அந்த செல்போனும் தவறுதலாக கைத்தவறியே ஈபிஎஸ் மீது விழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு!
முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனியாக ஒரு பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடியதாகப் பரவும் தகவல் அவதூறு பரப்பும் வகையில் பரவி வருகிறது.

உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?
உதயநிதி ஸ்டாலின் பிறந்தவுடனேயே கட்சியில் சேர்ந்ததாக கேலி செய்து வீடியோ வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் என்று பரவும் வீடியோ போலியானதாகும்

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தாரா விஜய்?
உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விஜய் விமர்சித்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)