இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

மணிமேகலையும் பிரியங்காவும் சண்டையிட்டதாக பரவும் எடிட் ஆடியோ!
மணிமேகலையும் பிரியங்காவும் குக் வித் கோமாளி படப்பிடிப்புத் தளத்தில் சண்டையிட்டதாக பரவும் ஆடியோ எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். மணிமேகலையும் பிரியங்காவும் பங்குப்பெற்ற வேறு சில நிகழ்ச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஆடியோக்களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்ய காவல்துறை செய்த செயல் என்று பரவும் கர்நாடகா வீடியோ!
உத்திரபிரதேசத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்ய காவல்துறை செய்த செயல் என்று பரவும் வீடியோ கர்நாடகாவைச் சேர்ந்ததாகும்.

விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, சிலையை கைது செய்தனரா கர்நாடக போலீஸ்?
கர்நாடக போலீஸ் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, விநாயகர் சிலையை கைது செய்து போலீஸ் வேனில் வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!
சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் புகைப்படம் தவறானதாகும். உண்மையில் அப்படமானது சீனாவில் உடல் உறுப்புகள் தானம் செய்த சாவ் ஜூ எனும் மருத்துவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படமாகும்.

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?
மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)