Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ஈரோடு தவெக மாநாட்டில் பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளதா?
ஈரோடு தவெக மாநாட்டில் பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் இருந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பிரியாணிக்காக திமுகவினர் அடிதடி; வைரலாகும் வீடியோ திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டதா?
திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டில் பிரியாணிக்காக திமுகவினர் அடிதடியில் ஈடுபட்டதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய நிதிஷ் குமாருக்கு கண்டனம் தெரிவித்தாரா ஷாருக்கான்?
இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய நிதிஷ் குமாருக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் ஷாருக்கான் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

விமானத்தில் பகவத் கீதை படித்த புதின்; வைரலாகும் படம் உண்மையானதா?
ரஷ்ய அதிபர் புதின் விமானத்தில் பகவத் கீதை படித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான படமாகும்.