Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்துள்ள விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்துள்ள விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தவெக தொண்டர்களை தெருநாய் என்று குறிப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?
தவெக தொண்டர்களை தெருநாய் என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

திமுக எம்.எல்.ஏ.க்களின் தோலை உரித்து விடுவேன் என்று பவன் கல்யாண் கூறினாரா?
திமுக எம்.எல்.ஏ.க்களின் தோலை உரித்து விடுவேன் என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதாக பரவும் வீடியோ செய்தி தவறானதாகும்.

தவெக தலைவர் விஜய் மக்களை நடுத்தெருவில் நிறுத்திச் சென்றதாக பேசினாரா நடிகை ரோஜா செல்வமணி?
தவெக தலைவர் விஜய் டைம் பாஸ் அரசியல் செய்வதாக நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் திரிக்கப்பட்டதாகும்.

‘ஐ லவ் மகாதேவ்’ எனும் பெயரில் உ.பி.யில் தீப்பந்த பேரணி நடந்ததா?
உத்திரப் பிரதேசத்தில் அரசுக்கு ஆதரவாக ஐ லவ் மகாதேவ் எனும் பெயரில் பேரணி நடந்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.