Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

பிரபல யூடியூபர் ஸ்பீட் மீது செருப்பை எறிந்து தளபதி விஜய் என கோஷமிட்ட நபர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
பிரபல யூடியூபர் ஸ்பீட் மீது செருப்பை எறிந்து TVK, தளபதி விஜய் என கோஷமிட்ட நபர்கள் என்று பரவும் வீடியோ மற்றும் ஆடியோ ஒன்றுக்கொன்று முரணாக எடிட் செய்யப்பட்டதாகும்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளாரா?
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதாக பரவும் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.

தவெக தலைவர் விஜய் பனையூரில் பதுங்கியதாக விமர்சனம் செய்தாரா நடிகர் சூரி?
தவெக தலைவர் விஜய் மக்களுடன் நிற்காமல் பனையூரில் பதுங்கியதாக விமர்சனம் செய்த நடிகர் சூரி என்று பரவும் செய்தி போலியானதாகும்.

தவெகவில் இணையத் தயார் என்று ஜி.கே.வாசன் கூறினாரா?
தவெகவில் இணையத் தயார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டதாகும்.

விஜயை காப்பாற்ற அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்த தாயார் ஷோபா என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?
விஜயை காப்பாற்ற அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்த தாயார் ஷோபா என்று பரவும் புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டே எடுக்கப்பட்டதாகும்.