Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை விஜய் சந்தித்ததாக பரவும் பழைய படங்கள்!
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை விஜய் சந்தித்ததாக பரவும் படங்கள் தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களை சந்தித்த நிகழ்வின்போது எடுக்கப்பட்டவையாகும்.

இந்து சடங்குகளின்படி விளக்கேற்றியதால் இந்து மனைவியை இஸ்லாமிய கணவர் தாக்கினாரா?
இந்து சடங்குகளின்படி விளக்கேற்றியதால் இந்து மதத்தை சார்ந்த மனைவியை இஸ்லாமிய மதத்தை சார்ந்த கணவர் தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ தகவல் தவறானதாகும்.

கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி காலில் தவறுதலாக விழுந்த விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி ஒன்றின் காலில் தவறுதலாக விழுந்த தவெக தலைவர் விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

விஜய் உருவ பொம்மையை மின்கம்பத்தில் கட்டி செருப்பு மாலை அணிவித்ததாக பரவும் எடிட் படம்!
விஜய் உருவ பொம்மையை மின்கம்பத்தில் கட்டி செருப்பு மாலை அணிவித்ததாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.