இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?
சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்று அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் அப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது பங்களாதேஷ் கலவரத்தில் மரணமடைந்தாரா?
இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது ஒருவர் பங்களாதேஷ் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார் என்பதாகப் பரவுகின்ற தகவல் ஆதாரமற்றதாகும்.

தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தோல்வியடைந்தது என்று சி.வி.சண்முகம் கூறினாரா?
தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வைரலாகி வருகின்றது. ஆனால் அந்த நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்வோம் என்றதா ஜொமோட்டோ?
ஜொமோட்டோ இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு விற்பனை செய்வோம் என்று அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் அந்த நியூஸ்கார்ட் போலியானதாகும்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனித் தமிழ்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றாரா?
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனித்தமிழ்தேசியம் கேட்டு விரைவில் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)