Fact Check
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனித் தமிழ்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றாரா?
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விரைவில் தமிழ்தேசியம் தனியாகக் கேட்டு டெல்லியில் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சமீபத்தில் “மரச்செக்கு எண்ணெய்க்கும் கருப்பட்டிக்கும் மாறியதுபோல தமிழர்கள் மீண்டும் தாய் சமயத்துக்கு திரும்ப வேண்டும்” என்பதாக பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
இந்நிலையில், “தனித் தமிழ்தேசியம் கேட்டு டெல்லியில் மிக விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு” என்கிற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?
Fact check/Verification
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனித்தமிழ்தேசியம் கேட்டு விரைவில் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், நாம் தமிழர் கட்சி மற்றும் சீமானின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் இதுபோன்று உண்ணாவிரதம் குறித்த செய்தி ஏதேனும் வெளியாகியிருக்கிறதா என்று ஆராய்ந்தோம். ஆனால், அதுபோன்ற எந்தவித அறிவிப்பும் வெளியாகி இருக்கவில்லை. மேலும், முன்னணி செய்தி நிறுவனங்களும் அதுபோன்ற செய்தி எதையும் வெளியிட்டிருக்கவில்லை.
தொடர்ந்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதியதலைமுறை லோகோவுடன் வைரலாகி வருவதால், அதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் ஹெட் சரவணனிடம் கேட்டோம். அப்போது அவர், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது என்று நமக்கு விளக்கமளித்தார்.
Conclusion:
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனித்தமிழ்தேசியம் கேட்டு விரைவில் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)