Claim: யோகி ஆதித்யநாத் பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக பரவும் படம்
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
நடிகர் ரஜினிகாந்த் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சமீபத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது யோகியின் காலில் ரஜினிகாந்த் விழுந்தார். இச்சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “சந்நியாசிகள் வயதில் சிறியவராக இருந்தாலும் அவர்களது காலில் விழுவது என் பழக்கம்” என்று சம்பவம் குறித்து விளக்கமளித்திருந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், “இவரு தான் முற்றும் தொறந்த முனிவரு..இவரு கால்லே ரசினி விழுந்தா தப்பா??” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருகின்றது. அப்படத்தில் யோகி ஆதித்யநாத் பொது நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவரின் இடுப்பை கிள்ளுவதாக இருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பதாகப் பரவும் வதந்தி!
Fact Check/Verification
யோகி ஆதித்யநாத் பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, கூகுள் லென்ஸை பயன்படுத்தி அப்படம் குறித்து ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வில் @Magaraja2021 எனும் எக்ஸ் கணக்கில் மார்ச் 27, 2021 அன்று “ஆபாசம் இது தான் பாஜக… இவர்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு..? மக்கள் சிந்தியுங்கள்…” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இதேபோன்று பலரும் பல சமயங்களில் இப்படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இப்படத்தை எடிட் செய்தே மேற்கண்ட போலி புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட போலி படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இப்படத்தில் வங்காள நடிகை ஸ்ராபந்தி சாட்டர்ஜி இருப்பதை காண முடிகின்றது.

ஸ்ராபந்தி சாட்டர்ஜி மார்ச் 21, 2021 அன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பெஹாலா பாஸ்சிம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இதனையடுத்து கட்சியில் இணைந்த எட்டு மாதத்திற்குள் நவம்பர் 11, 2021 அன்று பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனப்படையில் காண்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ஸ்ராபந்தி சாட்டர்ஜி கலந்துக்கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமானது எடிட் செய்யப்பட்டு, யோகி ஆதித்யநாத் பெண் ஒருவரிடம் தவறாக நடந்ததாக பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: ‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்றாரா அண்ணாமலை?
Conclusion
யோகி ஆதித்யநாத் பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக வைரலாகும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Tweet from @Magaraja2021, Dated March 27, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)