Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
யோகி ஆதித்யநாத், உத்திரபிரதேச முதல்வரான இவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக கேரளா வந்ததையொட்டி தொண்டர்கள் இணைந்து தாமரை சின்னத்தை அமைத்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் ஒன்றிணைந்து நிற்பது போலவும், கழுகுப் பார்வையில் அது பாஜகவின் சின்னமான தாமரை போன்று தெரிவது போன்றும் அப்புகைப்படம் அமைந்துள்ளது.
பிப்ரவரி 21, 2021 அன்று யோகி ஆதித்யநாத் கேரளாவிற்கு பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரையை துவங்கி வைக்க வந்திருந்தார். மேலும், அந்த விழாவில் அவர் கேரள அரசு ‘லவ் ஜிகாத்’ விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில், கேரளாவில் விஜய யாத்திரையில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத்தை வரவேற்கும் பொருட்டு பாஜக தொண்டர்கள் இணைந்து தாமரை மலர்வது போன்று நின்றிருந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Archived Link: https://archive.vn/LB5d5
https://www.facebook.com/jayamkumaravel.jayamkumaravel/posts/228308015643979
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட கேரள நிகழ்ச்சியில் உண்மையிலேயே பாஜக தொண்டர்களால் அப்படி ஒரு தாமரை வடிவம் மனித சங்கிலியால் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
கூடவே, கேரள பாஜகவின் சமூக வலைத்தளப் பதிவையும் கண்டறிந்தோம்.
இந்நிலையில், ரிவர்ஸ் சர்ச் முறையில் அப்புகைப்படத்தை தேடிய போது, கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
அப்புகைப்படப் பதிவில் அவர், “An innovative way to mark BJP’s ‘Sthapana Diwas.’ Congrats to the Karyakartas” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்த செய்தியை ஆராய்ந்து பார்த்தப்போது குறிப்பிட்ட அப்புகைப்படம், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பாஜகவின் 35வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், குஜராத் மாநிலம் தாகோத் என்கிற இடத்தின் கல்லூரி மைதானம் ஒன்றில் கூடிய கூட்டமாகும் என்பது நமக்குத் தெரிய வந்தது.
25,000 பாஜக தொண்டர்கள் அங்கு ஒன்றிணைந்து இந்த தாமரை வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதனை இண்டியன் எக்பிரஸ், தி குவிண்ட் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களும் பகிர்ந்துள்ளன.
யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி பாஜக தொண்டர்கள் கேரளாவில் உருவாக்கிய தாமரை வடிவமைப்பு என்று பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும். உண்மையில் அப்புகைப்படம் குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் மூலமாக உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே, வாசகர்கள் யாரும் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
BJP Keralam: https://twitter.com/BJP4Keralam/status/1363465526660321282?s=20
PM Narendra Modi: https://twitter.com/narendramodi/status/585087497350344705?s=20
Indian express: https://indianexpress.com/article/cities/ahmedabad/bjp-forms-human-flag-in-dahod-to-celebrate-35th-foundation-day/
The Quint:https://www.youtube.com/watch?v=GNYo-RTUhbw
ABP News: https://www.youtube.com/watch?v=99Il3pgZPYk&feature=youtu.be
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 7, 2025
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025