கங்கனா ரனாவத்தை கட்டி அணைத்த யோகி ஆதித்யநாத் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“இவ்வளவு சலுகைகள் இருந்தால் பலருக்கு பிரம்மச்சாரியாக ஆக வேண்டும் என்று ஆசை வந்து விடும், Happy Wedding Anniversary” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை என்று கூறினாரா ஒளிப்பதிவாளர் சந்தோஷ்?
Fact Check/Verification
கங்கனா ரனாவத்தை கட்டி அணைத்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் கங்கனா ரனாவத் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கட்டி அணைப்பதாக அமைந்திருந்த காட்சி இயல்புக்கு மாறாக அமைந்திருந்தது. யோகி ஆதித்யநாத் முகமும் எடிட் செய்யப்பட்டது போன்று மாற்றமடைவதை நம்மால் காண முடிந்தது.

மேலும், பரவும் வீடியோவிலேயே ஓரத்தில் Hailuo AI என்கிற வாட்டர் மார்க்கும் இடம் பெற்றிருந்தது. எனவே, இந்த வீடியோ குறிப்பிட்ட AI செயலி மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டோம்.
கடந்த அக்டோபர் 01, 2021 அன்று யோகி ஆதித்யநாத்தை கங்கனா ரனாவத் மரியாத நிமித்தமாக நேரில் சந்தித்திருந்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றிருந்தது. அதனை எடுத்தே இந்த வீடியோவை எடிட் செய்துள்ளனர் என்பதை அறிந்து கொண்டோம்.
குறிப்பிட்ட புகைப்படத்தை Hailuo AI பக்கத்தில் தேவையான குறிப்புகளுடன் பதிவிட்டப்போது நமக்கும் அவர்கள் இருவரும் கட்டியணைப்பது போன்ற மற்றொரு வீடியோ உருவாக்கம் செய்யப்பட்டு கிடைத்தது. அதிலும், வைரல் வீடியோ போன்றே வாட்டர் மார்க் அமைந்திருந்தது. எனவே, இந்த தளம் மூலமாகவே வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொண்டோம்.

இந்த வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நம்முடைய நியூஸ்செக்கர் அங்கம் வகிக்கும் The Deepfakes Analysis Unit (DAU), of The Misinformation Combat Alliance (MCA) மூலமாக Was it AI என்கிற AI கண்டறியும் தொழில்நுட்ப தரவை உபயோகித்து வைரலாகும் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்து கொண்டோம்.

இந்த சந்திப்பு தொடர்பான மேலும் சில செய்தி பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.
Also Read: ஈரோட்டில் துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனரா?
Conclusion
கங்கனா ரனாவத்தை கட்டி அணைத்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post by CM Office GoUP, Dated October 01, 2021
Hailuoai Experiment and DAU Analysis