Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்தனர்.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்ததாகும்.
“உத்திரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி மெடிடேசன்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம் உண்மையானதா?
பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்ததாக கூறி வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி படங்களாகப் பிரித்து, அப்படங்களை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் யூடியூப் பக்கம் ஒன்றில் 29 ஜூன் 2015 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் ஏபிபி நியூஸ் யூடியூப பக்கத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சிகளுடன் மே 29, 2015 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இச்செய்தியில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் குற்றச்செயல்களை புரித்த குற்றவாளிகளை போலீசார் பொது இடத்தில் வைத்து அடித்து, அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த இவ்வாறு செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்று 50 ஊர்வலங்கள், 15 காவல் நிலையங்களால் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஆஜ் தக், இந்தியா டிவி உள்ளிட்ட ஊடகங்களும் இந்தூர் போலீசாரின் இத்தகைய நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்ததாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube video uploaded on 29th June 2015.
Report published by ABP News on 29th May 2015.
Report published by Aaj Tak on 29th May 2015.
Report published by India TV on 29th May 2015.
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Ramkumar Kaliamurthy
April 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025