அதிமுக-பாஜக கூட்டணி ஜெயித்தால் மனிதர்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ்கள் குறைக்கப்பட்டு பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை பரப்புரையில் பேசியதாகப் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் நாளாக மே 2 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணிக்காக கோயம்புத்தூரில் பரப்புரை மேற்கொண்டார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
அப்போது அவர், “அதிமுக-பாஜக ஜெயித்தால் மனிதர்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ்கள் குறைக்கப்பட்டு பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும்” என்று பரப்புரையில் பேசியதாகக் கூறி புகைப்படம் ஒன்று முகப்புத்தகத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

‘இதெல்லாம் தவறுங்க’ என்னும் பேஸ்புக் பக்கம் இதனை பதிவு செய்துள்ளது. 234 பேருக்கும் மேல் இதனை ஷேர் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அதிமுக-பாஜக கூட்டணி ஜெயித்தால் மனிதர்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ்கள் குறைக்கப்பட்டு பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் புகைப்படம் புதியதலைமுறை வெளியிட்டிருந்த நியூஸ்கார்டு போன்று அமைந்திருந்ததால் புதியதலைமுறையின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்து பார்த்தோம்.
அதில், குறிப்பிட்ட நியூஸ் கார்டில் “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூபாய் 120 கோடி நிதி வந்துள்ளது. பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகம் பக்கமே உள்ளது” என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணி பற்றிய வாசகங்கள் இடம்பெறவில்லை.

மேலும், புதியதலைமுறை செய்தியாளர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது குறிப்பிட்ட அந்த பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் செய்தி, புதியதலைமுறையின் நியூஸ்கார்டினை போலியாக எடிட் செய்து யாரோ ஒருவர் உருவாக்கியிருப்பது நமக்கு உறுதியானது.

Fake

Original
Conclusion:
அதிமுக-பாஜக கூட்டணி ஜெயித்தால் மனிதர்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ்கள் குறைக்கப்பட்டு பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiyathalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2157736904383206
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)