Fact Check
காயத்ரி ரகுராம் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு பதிவிட்டாரா?
நாராயணன் திருப்பதி அவர்கள் காயத்ரி ரகுராம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் நாராயணன் திருப்பதி. இவர் தனது கட்சியின் கலை மற்றும் பண்பாட்டு அணியின் தலைவரான காயத்ரி ரகுராம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகின்றது.
அந்த ஸ்கிரீன்ஷாட்டில்,
“எப்போது பார்த்தாலும் காயத்ரி ரகுராம் அவர்களை குடிகாரி குடிகாரி என கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன், அவர் என்ன கொள்ளை அடித்தா குடித்தார், தன் சொந்த பணத்தில் தானே குடித்தார்.
நீங்கள் யாரும் குடிப்பதில்லையா. மனசாட்சி இல்லாத மனிதர்களாக வாழ வேண்டாம்.”
என்று காயத்ரி ரகுராம் குறித்து நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாக உள்ளது.”
இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/OXDcA

Archive Link: https://archive.ph/gnyyY

Archive Link: https://archive.ph/nGbDP
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
காயத்ரி ரகுராம் குறித்து நாராயணன் திருப்பதி உண்மையிலேயே இவ்வாறு ஒரு கருத்தை பதிவிட்டாரா என்பதை அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.
இவ்வாறு தேடியதில் நாராயணன் திருப்பதி அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.
உண்மையில் காயத்ரி ரகுராம் குறித்து நாராயணன் திருப்பதி பதிவிட்டதாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் நாராயணன் திருப்பதி அவர்களால் பதிவிட்டதே அல்ல, அது நாராயணன் திருப்பதி அவர்கள் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.


வாசகர்களின் புரிதலுக்காக நாராயணன் திருப்பதி அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
நாராயணன் திருப்பதி அவர்கள் காயத்ரி ரகுராம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட், உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Imposter
Our Sources
Twitter Advanced Search:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)