வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkஹெச்.ராஜா பாஜகவைச் சேர்ந்த பெண்கள் குறித்து இப்படிச் சொன்னாரா?

ஹெச்.ராஜா பாஜகவைச் சேர்ந்த பெண்கள் குறித்து இப்படிச் சொன்னாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஹெச்.ராஜா, ‘ஒரு கையில் காயத்ரி ரகுராமையும், மறு கையில் கலா மாஸ்டரையும் கொண்டு செல்வோம்’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது போன்ற புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

Source: Facebook

Fact check/Verification:

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர் ஹெச்.ராஜா.

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இவர், சில நேரங்களில் அவர் கூறாத கருத்துக்களுக்காகக் கூட வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது, “ஒரு கையில் காயத்ரி ரகுராமையும் மறுகையில் கலா மாஸ்டரையும் கொண்டு செல்வோம்” என்று அவர் கூறியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

https://www.facebook.com/ithellamthavarunga/photos/a.100378144949683/287659996221496/
Source: Facebook

Archived Link: https://archive.vn/S74CV

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் புகைப்படத் தகவல், அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது போன்று பரவுவதால் அவருடைய சமூக வலைத்தளப் பக்கங்களை ஆராய்ந்தோம்.

அதில், அப்படிப்பட்ட எந்த கருத்தையும் அவர் பதிவிடவில்லை என்பது நமக்குத் தெரிந்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தில் எழுத்துப் பிழைகளும் அதிகமாக இருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதைத்தாண்டி, ஹெச்.ராஜா அவர்களின் முகநூல் பக்கத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் தமிழக வருகையை ஒட்டி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா “ஒரு கையிலே சாதனைகளையும் மறு கையிலே சித்தாந்தத்தையும் கொண்டு செல்வோம்” என்று பேசியிருக்கிறார்.

Source: Twitter

https://www.facebook.com/HRajaBJP/videos/414019173143017

அதே காணொளியில் ஒரு இடத்தில் காயத்ரி ரகுராமும், கலா மாஸ்டரும் அமர்ந்திருப்பதை புகைப்படமாக எடுத்து குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

எனவே, ஹெச்.ராஜா அதுபோன்ற எவ்வித பதிவையும் இடவில்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

Conclusion:

ஹெச்.ராஜா, காயத்ரி ரகுராம் மற்றும் கலா மாஸ்டர் குறித்து பதிவிட்டதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் போலியானது; சித்தரிக்கப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Result: False

Our Sources:

H.Raja: https://twitter.com/HRajaBJP

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular