வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024

HomeFact Checkபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அதிமுக கட்சியை யானையின் சாணி என்று விமர்சனம் செய்தாரா?

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அதிமுக கட்சியை யானையின் சாணி என்று விமர்சனம் செய்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பாஜக மூத்த தலைவரான ஹெச். ராஜா தமிழ்நாட்டு எதிர்கட்சியான அதிமுகவை யானையின் சாணி என்பதாக விமர்சனம் செய்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பாஜக
Source: Facebook

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் தமிழக ஆளுநரின் உரை குறித்துப் பேசிய அதிமுக கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, `யானை வரும் முன்னே;மணியோசை வரும் பின்னே. இந்த ஆளுநர் அறிக்கையில் யானையும் இல்லை. மணியோசையும் எல்லை’ என்று விமர்சனம் செய்திருந்தார்.

தொடர்ந்து அதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக யாராலும் அடக்க முடியாத யானை. நான்கு கால்கள்தான் யானையினுடைய பலம். சமூக நீதி, சுயமரியாதை, மொழி- இனப்பற்று, மாநில உரிமை ஆகிய நான்கின் பலத்தில்தான் திமுகவும் நிற்கிறது” எனப் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஹெச்.ராஜா, “திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே. ஆனால், இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது” என்று கூறிய செய்தியை செய்தி நிறுவனத்தின் நியூஸ் கார்டு ஒன்றில் வெளியானது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பாஜக
Source: Facebook

Facebook Link

பாஜக
Source: Facebook

Facebook Link

பாஜக
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணி என்பதாக விமர்சனம் செய்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.

இதுகுறித்து, ஹெச்.ராஜா தரப்பில் கேட்டபோது, அவர் இதுபோன்ற கருத்து எதையும் கூறவில்லை என்பது நமக்கு தொலைபேசி வாயிலாக உறுதியானது.

Source: Twitter

தொடர்ந்து, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியானது; தங்களால் வெளியிடப்பட்டது இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.

Source: Facebook

Facebook Link

தந்தி டிவியின் இணை ஆசிரியரான அசோக வர்ஷினியை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, “குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் போலியாக உலவ விடப்பட்டுள்ளது; அதனை நாங்கள் சமூக வலைத்தளத்திலும் தெரிவித்துள்ளோம்” என்று உறுதிப்படுத்தினார்.

Conclusion:

பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணி என்பதாக விமர்சனம் செய்ததாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Thanthi Tv: https://www.facebook.com/ThanthiTV/posts/4215146318613680

Twitter: https://twitter.com/ThanthiTV/status/1408276992005337088?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

1 COMMENT

  1. போலி தகவகல்களை முக நூலில் பதிவிடுவது இனிமேல் தவிர்க்கப்படும்.தமிழ் மகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular