மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் பாஜக தேசியச் செயலாளருமான ஹெச்.ராஜா அவர்கள், “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினைப் போல் உலகிலேயே எந்த தலைவரும் சிறப்பான முறையில் செயல்படுவதில்லை. மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன். திருந்தி வாழ முயற்சிபேன்.” என்று கூறியதாக பிபிசி தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also Read: மாணவர் தனுஷின் உறவினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக வதந்தி!
‘மூடர்கூடம்’ இயக்குனரும் நடிகருமான நவீன் இந்த நியூஸ்கார்டை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதை நம்மால் காண முடிந்தது. இந்தப் பதிவை இதுவரை 1501 பேர் விரும்பியுள்ளனர். இதுதவிர்த்து 206 பேர் மறுகீச்சும், 47 பேர் மேற்கோள் கீச்சும் செய்துள்ளனர்.

இவரைத் தவிர்த்து மேலும் சிலரும் இந்த நியூஸ்கார்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்று ஹெச். ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இவ்வாறு நியூஸ்கார்டை பிபிசி தமிழ் வெளியிட்டுள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
ஹெச்.ராஜா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றார் என்றும், திமுக பிரிவினைவாதத்தை மக்கள் மனதில் புகுத்த நினைக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார்.
பிபிசி தமிழ் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியில் வெளியிட்டுள்ள நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட பொய் தகவல் பரப்பப்படுகின்றது.
Also Read:வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நோட்டு எண்ணும் மெஷின் இருக்கிறதா?
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Conclusion
மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)