வியாழக்கிழமை, ஜூலை 29, 2021
வியாழக்கிழமை, ஜூலை 29, 2021
HomeFact Checksகமல்ஹாசன் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாரா?

கமல்ஹாசன் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாரா?

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரான இவர் தமிழில் புரியாத வகையில் வார்த்தை விளையாட்டுடன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவினை இட்டதாகப் புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது.

கமல்ஹாசன்
Source: Twitter

கடந்த சில நாட்களாகவே மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொது வெளியில் பெருமளவில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். கடந்த ஞாயிறன்று மநீம கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழாவில் சக்கர நாற்காலி குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

ஆனால், உண்மையில் கமல்ஹாசன் சக்கர நாற்காலியில் அமரும் அளவிற்கு தனக்கு முதுமை வந்தப் பிறகு, தான் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வேன் என்று அர்த்தத்திலேயே பேசியுள்ளார் என்பதை நாம் உண்மையறியும் சோதனை மூலமாக வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், இன்று அவர் சமூக வலைத்தளப்பக்கத்தில் புரியாத வார்த்தைகளுடன் “நான் தான் நான் என்பதை நிரூபிக்க நான் நானாக வரவேண்டி இருக்கிறது. இதன் மூலம் நான்தான் நான் என்று என்னை நானே நிரூபித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது.

Source: Twitter

Archived Link: https://archive.vn/izotU

கமல்ஹாசன்
Source: Facebook

ஆனால் உண்மையில் கமல்ஹாசன் அதுபோன்று பதிவிட்டுள்ளாரா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கமல்ஹாசன் இவ்வாறு தன்னை நிரூபிப்பது என்கிற அர்த்தம் தொனிக்கும் வகையில் ஏதேனும் பதிவினை இட்டுள்ளாரா என்பதைக் குறித்து ஆராய, அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்தோம்.

ஆனால், அவர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதுபோன்ற எவ்விதப் பதிவினையும் இடவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தது.

கூடவே, பரவும் குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் இருக்கும் பயனாளர் பெயர் கமலின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பெயரான Kamal Haasan என்று இல்லாமல் Kamal haasan’s Admin என்று உள்ளது. மேலும், ட்விட்டர் ஐடியும் @iKamalhaasan என்பதற்கு பதிலாக @notthatkamal என்று அமைந்துள்ளது.

கமல்ஹாசன்
Source: Twitter (Kamal original tweet sample)

மேலும், அதுபோன்ற எவ்வித சமூக வலைத்தளப் பக்கமும் நமது ஆய்வில் ட்விட்டரில் கிடைக்கவில்லை. எனவே, கமல்ஹாசனை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் அது என்பது நமக்கு ஆய்வின் மூலமாகத் தெரிய வந்தது.

Conclusion:

கமல்ஹாசன் புரியாத வார்த்தைகளுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானது; அது அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கம் இல்லை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Satire

Our Sources:

Kamal Haasan Twitter: https://twitter.com/ikamalhaasan

Kamal Haasan Facebook: https://www.facebook.com/iKamalHaasan

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular