காசி ரத்னேஸ்வரர் ஆலய கோபுரம் 74 மீட்டர்; பைசா கோபுர உயரம் 54 மீட்டர்தான் என்பதாக புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

காசி ரத்னேஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. இதனை கட்டியவர்கள் யார்? இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான கதை என்ன என்பதெல்லாம் இன்றும் புதிரானவை. ரத்னேஸ்வரர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்து நிற்பது உண்மை. பைசா கோபுரம் 4 டிகிரி அளவிலேயே சாய்ந்துள்ளது.
Also Read: காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது புதிதான ஒன்றா?
ஆனால், வைரலாகும் பதிவில் ரத்னேஸ்வரர் ஆலய உயரம் பைசா கோபுரத்தை விட அதிகம்; பைசா கோபுர உயரம் 54 மீட்டர்தான். ஆனால், ரத்னேஸ்வரர் ஆலய கோபுர உயரம் 74 மீட்டர் என்கிற தகவலும் பரவுகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
காசி ரத்னேஸ்வரர் ஆலய கோபுரமானது பைசா கோபுரத்தை விட உயரமானது என்று பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட இந்த ரத்னேஸ்வரர் ஆலயம் 500 ஆண்டுகள் பழமையானது என்பதும், இதனுடைய உயரம் கிட்டதட்ட 13ல் இருந்து 14 மீட்டர் இருக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாச்சார் லைவ் உள்ளிட்ட செய்தித்தளங்களின் கட்டுரைகளில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரத்னேஸ்வரர் ஆலய உயரம் 74 மீட்டர் என்பதாகப் பரவுகின்ற தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
Conclusion:
காசி ரத்னேஸ்வரர் ஆலய கோபுரமானது பைசா கோபுரத்தை விட உயரமானது என்று பரவுகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)