Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கர்நாடகாவில் கன்னடத்தில் பேசிய முஸ்லீம் வாடிக்கையாளரை இந்தியில் பேச கூறிய வங்கி அலுவலர்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
கர்நாடகாவில் கன்னடத்தில் பேசிய முஸ்லீம் வாடிக்கையாளரை வங்கி அலுவலர் இந்தியில் பேச கூறியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் ”Bengaluru metro fight: Two women get into heated argument over speaking Kannada; video goes viral”என்று தலைப்பிட்டு இச்சம்பவம் குறித்து டெக்கான் ஹெரால்ட் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் இச்சம்பவம் மெட்ரோ ஸ்டேஷனில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீடியோவில் காணப்படும் இரண்டு பெண்களும் பயணிகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் பப்ளிக் டிவி யூடியூப் பக்கத்திலும் இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அவ்வீடியோவை காண்கையில் உண்மையில் அந்த இஸ்லாமிய பெண்ணே இந்தியில் பேசி இருந்தார். மற்றவர் கன்னடத்தில் பேசி இருந்தார்.
தொடர்ந்து தேடுகையில் நியூஸ் 18, இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் நவ், ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது
Also Read: நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் முதலிடம் என்பதாக சர்வே வெளியிட்டதா தந்தி டிவி?
இதன்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில்,
Sources
Report by Deccan Herald, dated October 1, 2025
Report by Public TV, dated September 29, 2025
Report by News 18, dated October 1, 2025
Report by Hindustan Times, dated September 30, 2025
Report by Times Now, dated October 2, 2025
Report by Financial Express, dated October 2, 2025
Ramkumar Kaliamurthy
November 14, 2025
Ramkumar Kaliamurthy
October 13, 2025
Ramkumar Kaliamurthy
February 26, 2025