வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeFact Checkகமல்ஹாசனை முட்டாள் என்றாரா பழ.கருப்பையா?

கமல்ஹாசனை முட்டாள் என்றாரா பழ.கருப்பையா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை முட்டாள் என்று அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கமல்ஹாசனை முட்டாள் என்று பழ.கருப்பையா விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட்

தமிழக அரசியல் வரலாற்றில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் பழ.கருப்பையா. இவர் இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார். இது தவிர்த்து தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவர் கடைசியாக கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அங்கு இவருக்கு அரசியல் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read: கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?

இந்நிலையில் பழ.கருப்பையா அவர்கள் அண்மையில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இப்பேட்டியில் “கமல் போன்ற முட்டாளை நான் அதிமுகவில் கூட பார்த்தது இல்லை” என்று கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கமல்ஹாசனை முட்டாள் என்று பழ.கருப்பையா விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archieve Link

கமல்ஹாசனை முட்டாள் என்று பழ.கருப்பையா விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

கமல்ஹாசனை முட்டாள் என்று பழ.கருப்பையா விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பழ.கருப்பையா கமல்ஹாசன் முட்டாள் என்று கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தோம். அதில் வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.

பழ.கருப்பையா நியூஸ்18 தமிழ்நாட்டிற்கு அளித்த பேட்டியில், “அரசியல் ஆலோசகர் எனும் பதவியை என் மீதுள்ள அன்பின்பால் என்னை கௌரவிப்பதற்காக கமல் அளித்தார். அவர் என்னிடம் ஆலோசனை கேட்பதும் இல்லை, நான் அவருக்கு சொன்னதும் இல்லை”  எனும் கருத்தை தெரிவித்திருந்தார்.

Archive Link

இந்த தகவலை நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.

Archive Link

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே கமல்ஹாசனை முட்டாள் என்று பழ.கருப்பையா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பொய்யாக பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: உலகத்தின் வலிமையான தலைவர் மோடி என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதா?

Conclusion

மநீம தலைவர் கமல்ஹாசனை முட்டாள் என்று பழ.கருப்பையா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 18 Tamilnadu

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular