வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஎச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி பாஜக தலைவர் எச்.ராஜா, திய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி மற்றும் சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு  சமீபத்தில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

இந்தச் சிறப்புக் காட்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எச்.ராஜா. இச்சந்திப்பில்  “யார் சீமான்?  சீமானோட அம்மா முதல்ல தமிழச்சியா? அன்னம்மா தமிழா? இல்லை. அவர் ஒரு மலையாளி.”  என்று சீமான் குறித்தும் அவர் தாய் குறித்தும் ஆவேசமாகி பேசி  இருந்தார் எச்.ராஜா.

Courtesy: Thamarai TV

இந்நிலையில் சீமான் அவர்கள் “எச்.ராஜா என் தந்தையைப் போன்றவர். பெற்றவரின் கோபத்தை பிள்ளைகள் நாங்கள் கடந்து செல்வோம்”  என்று பேசியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

YouTube Link

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

YouTube Link

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

YouTube Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சாலையின் நிலை என்று கிண்டலுக்கு உள்ளாகும் தவறான புகைப்படத் தகவல்!

Fact check/ Verification

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக  தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.

இதற்கு அவர்கள்,

“இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்”

என்று விளக்கமளித்தனர்.

மேலும் இதுகுறித்து தேடுகையில், எச்.ராஜாவின் பேச்சுக்கு சீமான் கடுமையாக பதிலளித்திருந்ததை காண முடிந்தது.

சமீபத்தில் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதில் எச்.ராஜா குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டபோது, “நான் எப்போதுமே பைத்தியக்காரர்களை கண்டு பரிதாபப்படுவேனே ஒழிய, அவர்களுக்கு பதில் சொல்லுவதில்லை”  என்று பதிலளித்திருந்தார்.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என உறுதியாகின்றது.

Also Read: கோட்சேவை மாவீரன் என்றாரா சீமான்?

Conclusion

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Thamarai Tv

Red Pix

Thanthi Tv Digital Team:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular