Friday, March 14, 2025
தமிழ்

Fact Check

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சாலையின் நிலை என்று கிண்டலுக்கு உள்ளாகும் தவறான புகைப்படத் தகவல்!

banner_image

தமிழ்நாட்டில் திமுக அரசின் புதிய திட்டம் என்பதாக கார் ஒன்று சாலையில் ஏற்பட்டுள்ள குழிக்குள் மாட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில்
Source: Facebook

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட 17 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழையால் மாநிலம் முழுவதுமே பரவலாக மிதமான தட்பவெட்ப நிலை நிலவுகிறது.

Also Read: கோட்சேவை மாவீரன் என்றாரா சீமான்?

இந்நிலையில், மழையால் கார் ஒன்று சாலையில் உள்ள குழிக்குள் மாட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் “#திமுக_அரசின் புதிய திட்டம். வாகனங்களின் என்ஜின் சூடு குறைப்பதற்கு சாலைகளில் ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறையினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்கிற வாசகங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இதனை அரசியல் பிரபலங்கள் சிலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில்
Source: Facebook

Facebook Link

தமிழ்நாட்டில்
Source: Facebook

Facebook Link

தமிழ்நாட்டில்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சாலையின் நிலை என்று கிண்டலுக்கு உள்ளாகும் புகைப்படத்தின் உண்மைநிலை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அப்போது, குறிப்பிட்ட அந்த புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே வைரலாகி வருவது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகள் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைப் பற்றி கேலியான வகையில் பிரபல பதிவரான Jose Covaco என்பவர் வெளியிட்ட வீடியோ வைரலாகியது. அதனைத் தொடர்ந்து மிரர் நவ் பத்திரிக்கையாளரான Faye D’Souza உள்ளிட்ட பலரும் மும்பை சாலைகளின் நிலை என்று கிண்டலாக புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து டிவிட்டர் வாசிகள் பலரும் இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

அதில், Yogi Donald Nath என்கிற டிவிட்டர் பதிவர் ஒருவர் குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்து, “They have also opened Automobile washing centers at convenient locations across the city. People getting benefited.” என்கிற வாசகங்களுடன் பகிர்ந்திருந்தார்.

Source: Twitter

இதனை டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்போது செய்திக்கட்டுரையாக வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த புகைப்படமே தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாலைகளின் நிலை என்பதாகப் பகிரப்பட்டு வருகிறது என்பது நமக்கு உறுதியானது.

Conclusion:

தமிழ்நாட்டில் திமுக அரசின் புதிய திட்டம், வாகனங்களின் என்ஜின் சூடு குறைப்பதற்கு சாலைகளில் ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறையினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதாகப் பரவும் புகைப்படத் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

TOI

Twitter

OneIndia Tamil

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.