ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுகு நடிகர் சங்கமான‘மா’ (MAA-Movie Artists Associations)-வில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கின்றார். பிறப்பால் கன்னடரான இவர், எவ்வாறு தெலுங்கு நடிகர் சங்கத்தில் போட்டியிட முடியும் எனும் விமர்சனத்தை சிலர் எழுப்பியதைத் தொடர்ந்து, இது மிகப்பெரிய சர்ச்சையை தெலுங்கு திரைப்பட உலகில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமர்சனங்களுக்கு சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரகாஷ்ராஜ் பதிலளித்தார். இச்சந்திப்பில் பிரகாஷ்ராஜ் அளித்த பதிலை அடிப்படையாகக் கொண்டு பல பொய் செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றது.
இச்சந்திப்பில் பிரகாஷ்ராஜ், “தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா” என்று கேள்வி எழுப்பியதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது.
இச்செய்தியை உண்மை என நம்பி பலர் இதை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதன்பின் பிரகாஷ்ராஜ் இவ்வாறு கூறினாரா என்பதை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்து, இது முற்றிலும் பொய்யான செய்தி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கி இருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்?
தற்போது இதனைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் அவர்கள் ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என கேள்வி எழுப்பியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதா?
Fact Check/Verification
பிரகாஷ்ராஜின் இனம் குறித்து தெலுங்கு திரையுலகில் எழுந்த சர்ச்சைக்கு பிரகாஷ்ராஜ் அளித்த விளக்கம் குறித்து ஏற்கனவே நாம், “தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்?” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியிலேயே விளக்கி இருந்தோம். அந்த விளக்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து எந்த ஒரு இடத்திலும் பிரகாஷ்ராஜ் பேசவே இல்லை.
ஆயினும் பிரகாஷ்ராஜ், ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா? என கேள்வி எழுப்பியதாக வைரலாகும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்டை பலரும் உண்மை என்று பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முறைப்படி ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முன்னதாக பிரகாஷ்ராஜ் அவர்களிடம் இந்த செய்தி குறித்து கேட்டோம். அதற்கு அவர்,
“இது சுத்த முட்டாள்தனமாக உள்ளது, இவ்வாறு ஒரு விஷயத்தை நான் பேசவே இல்லை”
என்று பதிலளித்தார்.
இதன்பின் தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு இச்செய்திக் குறித்துக் கேட்டோம். இதற்கு அவர்கள் இது பொய் செய்தி, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை என பதிலளித்ததோடு, இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவாக பதிவிட்டுள்ளனர்.
Conclusion
ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியதாக சமூக வலைத்தளங்களில் வைரலான நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Actor Prakash Raj:-
Thanthi TV: https://twitter.com/ThanthiTV/status/1410458554285187072
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)