சனிக்கிழமை, ஜூலை 24, 2021
சனிக்கிழமை, ஜூலை 24, 2021
HomeFact Checksசூரியனின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளதா?

சூரியனின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளதா?

சூரியனின் மேற்பரப்பின் புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டது என்பதாக சில புகைப்படங்களுடன் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Twitter

Fact Check/ Verification:

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி தொடர்பான ஆய்வுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்நிலையில், நாசா வெளியிட்டதாகக் கூறி வெளியாகும் பொய்ச்செய்திகளும் நம்மிடையே ஏராளம்.

சமீபத்தில் நாம் ஆராய்ந்து தெளிவாக்கியிருந்த சூரியப்புயல் குறித்த கட்டுரையும் அதுபோன்ற வதந்தி ஒன்றினை வாசகர்களுக்கு ஆய்வு செய்து கூறப்பட்ட ஒன்றாகும்.

தற்போது, நாசா வெளியிட்டுள்ளதாக மீண்டும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், சூரியனின் மேற்பரப்பின் மிகத்துல்லியமான நாசாவின் புகைப்படம் என்பது போன்ற வாசகங்களும் இடம் பெறுகின்றன.

Source: Twitter

Archived Link: https://archive.vn/kV0uQ

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற சூரியனின் மேற்பரப்பு புகைப்படங்கள் என்னும் தகவலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அப்புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அதன் முடிவில், ஜேசன் கெளன்செல் (Jason Guenzel) என்கிற புகைப்படக்கலைஞர் இப்புகைப்படங்களை உருவாக்கியிருப்பது நமக்குத் தெரிய வந்தது.

அவரது ட்விட்டர் பக்கமும் நமக்குக் காணக் கிடைத்தது. அதில், ஜனவரி 13ம் தேதியன்று மென்பொருட்கள் மூலமாக முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சூரியனின் புகைப்படம் என்று இப்புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

Source: Twitter

மேலும், நாசாவால் வெளியிடப்பட்ட புகைப்படம் என்று ஒரு பதிவின் கீழ், “புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. ஆனால், இது என்னுடைய புகைப்படம். எங்களது வீட்டின் பின்புறமுள்ள சோலார் டெலஸ்கோப் மூலமாக பதிவு செய்யப்பட்டு, பின்பு மென்பொருளால் ப்ராசஸ் செய்யப்பட்ட புகைப்படம் இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: Twitter

Conclusion:

எனவே, நாசாவால் வெளியிடப்பட்ட சூரியனின் மேற்பரப்பின் புகைப்படங்கள் எறு பரவும் தகவல் தவறானதாகும். அது உண்மையில் ஜேசன் கெளன்சல் என்பவரால் எடுக்கப்பட்டு மறுவடிவமைப்புக்கு உள்ளான புகைப்படம் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading/Partly False

Our Sources:

Jason Guenzel: https://twitter.com/TheVastReaches

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular