ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 1, 2021
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 1, 2021
HomeFact Checksயோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது உபி மருத்துவமனையா?

யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது உபி மருத்துவமனையா?

யோகி அரசின் சாதனை என்று மருத்துவமனை ஒன்றின் வெளிப்புறத்தோற்றத்துடன் உபி அரசின் சாதனையாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

யோகி
Source: Facebook

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசத்துவங்கிய காலகட்டத்தில் அதன் பிடியில் சிக்கி வெகுவாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்திர பிரதேச மாநிலமும் ஒன்று.

ஆக்சிஜன் பற்றாக்குறை, நிரம்பி வழிந்த அரசு மருத்துவமனைகள், கொரோனா தொடர்பான சர்ச்சைகள், மாநில முதல்வரே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலை என்று இரண்டாவது அலை உபியை புரட்டிப் போட்டது.

இந்நிலையில், “யோகி ஆதித்யநாத் சாதனைக்கு குவியும் பாராட்டுகள். உத்திரப் பிரதேசத்தில் வெறும் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கையை ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் அதை 48 ஆக உயர்த்தியது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு” என்கிற வாசகங்களுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
பிரச்சினை அதுவல்ல. உண்மையிலேயே மருத்துவமனைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதா என்கிற கேள்விகள் ஒருபுறம் இருக்க குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் உத்திரபிரதேச மாநில மருத்துவமனை என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடம்தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

யோகி
Source: Facebook

Facebook Link

யோகி
Source: Facebook

Facebook Link

யோகி
Source: Facebook

Facebook Link

பாஜகவின் முக்கிய பிரமுகர் கே.டி.ராகவன் உட்பட பலரும் குறிப்பிட்ட இப்புகைப்படத்தை ஷேர் செய்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது உத்திரபிரதேச மருத்துவமனை என்று பரவும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய குறிப்பிட்ட அந்த மருத்துவமனை புகைப்படத்தை மட்டும் க்ராப் செய்து ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உள்ளாக்கினோம்.

தேடலின் முடிவில், குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் மருத்துவமனை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை என்பதும், அம்மருத்துவமனை சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருப்பதும் நமக்கு உறுதியானது.

Source: RIS

இதனை சமூக வலைத்தளங்களிலும் பலரும் பகிர்ந்துள்ளனர்.

Source: Facebook

Facebook Link

மேலும், குறிப்பிட்ட அந்த பதிவை வெளியிட்டிருந்த மீடியான் நிறுவனம் அதனை நீக்கி விட்டு, அதற்கான விளக்கத்தை வெளியிட்டு தவறை சரி செய்துள்ளது.

Source: Facebook

Facebook Link

இதுதொடர்பாக, குறிப்பிட்ட புகைப்படத்தை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பகிர்ந்து கேட்டபோது, குறிப்பிட்ட வைரல் போட்டோவில் உள்ள மருத்துவமனை முன்புறப் புகைப்படம் காமாட்சி மருத்துவமனையுடையதே என்பதை நமக்கு உறுதி செய்தனர். குறிப்பிட்ட அப்புகைப்படம் காமாட்சி மருத்துவமனையின் வெளிப்புறத் தோற்றத்தின் பழைய புகைப்படம் என்பதையும், சர்ச் இஞ்சின்களில் அப்புகைப்படமே காமாட்சி மருத்துவமனை குறித்த தேடல்களில் காட்டப்படும் என்பதையும் தற்போது புதிதாக எடுக்கப்பட்டுள்ள முன்புறத்தோற்றம் அவர்களது அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெளிவு படுத்தினர்.

Conclusion:

யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது உத்திரபிரதேச மருத்துவமனை என்று பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources:

Dr Kamakshi memorial Hospital Management

Website: https://www.drkmh.com/

Facebook: https://www.facebook.com/DRKAMAKSHIMEMORIALHOSPITAL/photos/?ref=page_internal

Twitter: https://twitter.com/drkmhpvtltd

BBC: https://www.bbc.com/tamil/india-56818390

Mediyaan News: https://www.facebook.com/mediyaannews/posts/4509517999066649

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular