வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Check‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் பிரதமருக்கு பரிசளிக்கப்பட்டதா?

‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் பிரதமருக்கு பரிசளிக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிரதமர் மோடிக்கு ‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் பரிசளிக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ டி-சர்ட் ஒன்றை பரிசாக அளிப்பதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ஜியானி வழங்கிய அந்த டி-சர்ட்டில் மோடி 420 என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களி பலரும்  பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Twitter Link | Archive Link

பிரதமருக்கு மோடி 420 என்று எழுதப்பட்ட டி-சர்ட் பரிசளிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் - 2

Twitter Link | Archive Link

பிரதமருக்கு மோடி 420 என்று எழுதப்பட்ட டி-சர்ட் பரிசளிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பள்ளிகளில் இறைவணக்கத்தை தவிர்க்க ஏன் உத்தரவிட்டது தமிழக அரசு?

Fact check/ Verification

பிரதமருக்கு ‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை ஜியானி பரிசளித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு  உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதை நம்மால் அறிய முடிந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள அர்ஜெண்டினா சென்றிருந்தார். இத்தருணத்தில் FIFA தலைவர் ஜியானி பிரதமர் மோடியை சந்தித்து மோடி ஜி-20 என்றே எழுதப்பட்ட டி-சர்ட் ஒன்றை பரிசாக அளித்தார்.  

இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு, இத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Archive Link

இந்நிகழ்வு குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது. அதை இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.

மேற்கண்ட நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதா?

Conclusion

FIFA தலைவர் ஜியானி பிரதமர் மோடிக்கு ‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் பரிசளித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered

Our Sources

Narendra Modi Twitter Handle

Times of India: https://timesofindia.indiatimes.com/india/pm-modi-receives-special-football-jersey-from-fifa-president/articleshow/66905176.cms

India.com: https://www.india.com/sports/prime-minister-narendra-modi-thanks-fifa-president-gianni-infantino-after-receiving-football-jersey-as-gift-see-pic-3456400/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular