Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகவும், அதனை அவர் மறைந்ததால் நடிகர் ரஜினிகாந்த் தள்ளுபடி செய்வதாகக் கூறியதாகவும் நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.
நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அவரைப் பற்றி நினைவு கூர்ந்து பேசியிருந்தனர்.
இந்நிலையில்தான், “மயில்சாமி எனது நீண்ட கால நண்பர். கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்தார். இனி அந்த கடனை எப்படி அடைப்போம் என அவரது குடும்பத்தினர் கவலையடைய வேண்டாம். அதை நான் முழுமையாக தள்ளுபடி செய்கிறேன். இது என் கடமை.” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் ஈபிஎஸ் நடிக்கின்றார் என்றாரா மயில்சாமி?
Fact Check / Verification
மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் நக்கீரன் பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.
அதில், குறிப்பிட்ட அதே புகைப்படத்துடன் “மயில்சாமி என்னுடைய நீண்டகால நண்பர். அவர் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றிருந்தபோது எனக்கு 3 முறை போன் செய்திருந்தார். என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றிருந்தேன். அதற்குள் மறைந்துவிட்டார். சிவன் கோயிலில் நான் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அவரின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று நடிகர் ரஜினிகாந்த், மறைந்த நடிகர் மயில்சாமி குறித்து கூறியிருந்த செய்தியே இடம் பெற்றிருந்தது.
தொடர்ந்து, வைரல் நியூஸ்கார்ட் குறித்து நக்கீரன் செய்தியாளர் வசந்தை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். நக்கீரன் தரப்பில் இதுபோன்ற எந்த செய்தியும் வெளியிடவில்லை” என்று தெரிவித்தார்.
Also Read: நடிகை அனுஷ்காவிற்கு சிரிப்பு வியாதி என்று பரவும் தவறான தகவல்!
Conclusion
மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Sources
Facebook Post From, Nakkheeran, Dated February 19, 2023
Phone Conversation From, Vasanth, Nakkheeran Magazine
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.