வெள்ளிக்கிழமை, டிசம்பர் 2, 2022
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 2, 2022

HomeTamilபத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் போனஸ் தருவேன் என்றாரா எச்.ராஜா?

பத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் போனஸ் தருவேன் என்றாரா எச்.ராஜா?

பத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் தீபாவளி போனஸ் தருவேன். இந்து பண்டிகைக்கு கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதற்கு போனஸ் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது.

பத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் தீபாவளி போனஸ் தருவேன் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter @Podcast_of_DB

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடுகிறாரா பிரதமர்?

Fact Check/Verification

எச்.ராஜா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் தீபாவளி போனஸ் தருவேன் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருவதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் ஏபிபி நாடு தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டில் இருப்பதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, ஏபிபி நாடு தொலைக்காட்சியின் பொறுப்பாளர் ஸ்டாலினை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் சமூக ஊடகப் பொறுப்பாளர் சிடிஆர் நிர்மல்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்ததில், அது பொய்யானது என்று விளக்கமளித்தார்.

Also Read: சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?

Conclusion

பத்திரிக்கையாளர்களில் இந்துக்களுக்கு மட்டும்தான் தீபாவளி போனஸ் தருவேன். இந்து பண்டிகைக்கு கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதற்கு போனஸ் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது  என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation with Stalin, ABP Incharge, on Oct 14
Phone Conversation with CTR Nirmalkumar, President, BJP IT Wing, on Oct 14


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular