வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkபாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் அமித் ஷா மகன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும்...

பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் அமித் ஷா மகன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும் படம் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்  மகன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக பரவும் புகைப்படம் .

அமித் ஷாவின் மகனும்  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளருமான ஜெய் ஷா இந்திய தேசியக் கொடியை புறக்கணித்ததாக அண்மையில் ஒரு சர்ச்சை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் சந்திப்பு நடத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.  

பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக பரவும் புகைப்படம் .- 01

Twitter Link / Archive Link

பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக பரவும் புகைப்படம் .- 02
Source: Facebook

Facebook Link

பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக பரவும் புகைப்படம் .- 03

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மங்களூரில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பழைய வீடியோவை பரப்பும் பாஜகவினர்

Fact Check/Verification

பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்  மகன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் படத்தில் ஜெய் ஷாவுடன் பாலிவுட் நடிகையும் மாடலுமான ஊர்வசி ரவுத்தேலா இடம்பெற்றிருந்தார். இவர்களைத் தவிர்த்து மூன்றாவதாக இருந்த நபர் யார் என்பதை அறிய வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் டீம் ஊர்வசி ரவுத்தேலா அஃபிஷியல் (teamurvashirautelaofficial) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வைரலாகும் படம் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் இப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Instagram will load in the frontend.

அப்பதிவில் ஜெய் ஷா மற்றும் ஊர்வசி ரவுத்தேலாவைத் தவிர்த்து யாஷ்ராஜ் ரவுத்தேலா என்பவரின் இன்ஸ்டாகிராம் ஐடியும் டேக் செய்யப்பட்டிருந்தது. அந்த ஐடியை ஆய்வு செய்ததில், யாஷ்ராஜ் ஊர்வசி ரவுத்தேலாவின் சகோதரர் என்பதை அறிய முடிந்தது.

அண்மையில் யாஷ்ராஜ் ரவுத்தேலா, ஊர்வசி ரவுத்தேலாவுடன் அவரது பிறந்தநாளை கொண்டாடிய படம் ஒன்றை ஊர்வசி ரவுத்தேலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண முடிந்தது. இப்பதிவில் யாஷ்ராஜையும் டேக் செய்துள்ளார் ஊர்வசி.

Instagram will load in the frontend.

இதே பதிவை ஊர்வசி ரவுத்தேலாவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் காண முடிந்தது.

இதைத் தவிர்த்து யாஷ்ராஷுடன் ஊர்வசி ரக்ஷா பந்தன் கொண்டாடிய படங்களையும் காண முடிந்தது.

Conclusion

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக கூறி பகிரப்படும் படம் தவறானது என்பதும், அப்படத்தில் காணப்படுபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் சகோதரர் யாஷ்ராஷ் என்பதும் தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இதே செய்தி நியூஸ்செக்கர் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)

Result: Partly False

Sources

Instagram Post from Team Urvashi Rautela on August 29, 2022
Instagram Post from Yashraj Rautela on September 02, 2022
Facebook posts from Urvashi Rautela on September 02, 2022 and August 11, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular