பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று (02/10/2022) கர்நாடக மாநிலம் மங்களூருக்கு வருகை புரிந்து, ₹3800 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மங்களூரில் பிரதமர் கலந்துகொண்ட இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டு “மோடி! மோடி! என்று கோஷமிட்டு ஆரவாரம் செய்ததாக வீடியோ ஒன்றை தமிழக பாஜகவின் சமூக ஊடக அணியின் செயலாளர் ஜி.பிரதீப் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மேலும் சிலரும் இவ்வீடியோவை பகிர்ந்துள்ளனர்.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மங்களூரில் பிரதமர் கலந்துகொண்ட விழாவில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தமை குறித்து அறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் வீடியோ 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது. பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ 2009 ஆண்டே பதிவிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
அதேபோல் பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இவ்வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
Also Read: அரசியலை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?
Conclusion
மங்களூரில் பிரதமர் கலந்துகொண்ட விழாவில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்பதும், உண்மையில் அவ்வீடியோ கொல்கத்தாவில் எடுக்கப்பட்டதென்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது)
Result: False
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)