Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக பரவும் படம்
Fact: உண்மையில் அவர்கள் லெபனான் நாட்டை சார்ந்தவர்களாவர். இச்சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் நடந்ததாகும்.
“100% முஸ்லீம் நாடான எகிப்து, காஸாவிலிருந்து முஸ்லிம்கள் தனது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்தது. இப்போது காஸா முஸ்லிம்கள் உயரமான வேலியைக் கடந்து எகிப்துக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்கள் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!
Fact Check/Verification
காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் லெபனான் நாட்டை சார்ந்தவர்கள் பாலஸ்தீன எல்லைப் பகுதியில் இருப்பதாக வீடியோ ஒன்று மே 16, 2021 அன்று எக்ஸ் தளப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த வீடியோவில் வைரலாகும் படத்தில் காணப்படும் காட்சி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. கூடவே வைரலாகும் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள @naderram1 எனும் பயனர் ஐடியும் அவ்வீடியோவில் காணப்படுவதை காண முடிந்தது.
இதனடிப்படியில் காண்கையில் வைரலாகும் படம் இவ்வீடியோவின் ஒரு பகுதி என அறிய முடிகின்றது. தொடர்ந்து தேடியதில் இவ்வீடியோவின் பெரிய பதிப்பு யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து உரிய கீ வேர்டுகளை பயன்படுத்தி தேடுகையில் லெபனான் – இஸ்ரேல் எல்லைப்பகுதியில் மே 15, 2021 அன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்கள் கூடியதாக கூறி ராய்ட்டர்ஸ் தளத்தில் படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இப்படத்தில் காணப்படும் கட்டிடம் மேற்கண்ட எக்ஸ் பதிவு மற்றும் யூடியூபில் காணப்படும் இரு வீடியோக்களிலும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து மே 2021-யில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது யாதெனில்,
- வைரலாகும் படத்தில் காணப்படுவர்கள் காஸா முஸ்லீம்கள் அல்ல; அவர்கள் லெபனான் நாட்டை சார்ந்தவர்களாவர்.
- வைரலாகும் படத்தில் காணப்படும் பகுதி இஸ்ரேல் – எகிப்து எல்லைப்பகுதி அல்ல; அது லெபனான் எல்லைப்பகுதியாகும்.
- அந்த உயரமான சுவருக்கும் எகிப்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
- வைரலாகும் படத்தில் காணப்படும் சம்பவம் தற்போது நடந்ததல்ல; இரண்டு வருடங்களுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் நடந்ததாகும்.
Conclusion
காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from ree_mii2002, Dated May 16, 2021
Youtube video, Dated May 20, 2021
Reuters Picture
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.