Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தினாரா பிரதமர் மோடி?

banner_image

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக பரவும்  புகைப்படம்

நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்திருந்தார். அப்புகைப்படத்தில் லென்ஸ் மூடியை கழற்றாமல் பிரதமர் மோடி கேமராவை பயன்படுத்துவதாக இருந்தது.

Screenshot from WhatsApp bot

இதைத் தொடர்ந்து டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் இந்த புகைப்படம் பரவுவதை நம்மால் காண முடிந்தது.

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக பரவும்  புகைப்படம் - 02
Screenshot from Twitter @peran_periyar
பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக பரவும்  புகைப்படம் - 03
Screenshot from Facebook / abiraminathan.sankaran.3

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தி தங்கை மகளுடன் இருக்கும் படத்தை தவறான கண்ணோட்டத்தில் பரப்பும் நெட்டிசன்கள்!

Fact Check/Verification

அதில் நமீபியாவில் கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு பிரதமர் மோடி  அர்ப்பணிக்கும் விழா கடந்த சனியன்று நடந்ததை குறித்து, ‘PM Modi’s love for photography on display again: Check out his cheetah shots’ என்ற தலைப்பிட்டு ஃபர்ஸ்போஸ்ட் நேற்றைய முன்தினம் (செப்டம்பர் 17) செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இச்செய்தியில் பிரதமர் சிறுத்தைகளை படம் பிடிக்கும் படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அப்படத்தில் பிரதமர் லென்ஸ் மூடியை கழற்றி கேமராவை பயன்படுத்துவதாகவே இருந்தது.

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக பரவும்  புகைப்படம் - 4
Screenshot from Firstpost.com

ஃபர்ஸ்ட்போஸ்ட் வெளியிட்டிருந்த செய்தியில் Press Information Bureau (PIB)-யிடமிருந்து இந்த புகைப்படம் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  இதனையடுத்து PIB-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடியதிலும் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அப்படத்திலும் பிரதமர் லென்ஸ் மூடியை இல்லாமல்தான் கேமராவை பயன்படுத்தி இருந்தார்.

பிரதமர் மோடி இவ்விழா குறித்த வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவ்வீடியோவில் பிரதமர் மோடி லென்ஸ் மூடி இல்லாமல் கேமராவை பயன்படுத்தும் காட்சிகளை காண முடிந்தது.

Instagram will load in the frontend.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.  

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக பரவும்  புகைப்படம் - 05
Courtesy: Viral Post & PIB

Also Read: எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர்! வைரலாகும் தகவல் உண்மையானதா?

Conclusion

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

Result: Altered Image

Sources

Report of Firstpost, published on September 17, 2022
PIB Archives


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.