Wednesday, April 23, 2025

Fact Check

ராகுல் காந்தி தங்கை மகளுடன் இருக்கும் படத்தை தவறான கண்ணோட்டத்தில் பரப்பும் நெட்டிசன்கள்!

banner_image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் 150 நாட்களுக்கு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இப்பயணத்தை கிண்டலடித்தும், விமர்சித்தும் பலர் சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஷமத்தனமான பதிவுகளை பகிர்ந்து வருவதை நம்மால் காண முடிகின்றது.

ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம்
Screenshot from Facebook / இராமதாஸ் பீனிக்ஸ்
ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம் - 01
Screenshot from Facebook / swamikanmani.nadar
ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம் - 02
Screenshot from Facebook / jayamkumaravel.jayamkumaravel

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர்! வைரலாகும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தவறான கண்ணோட்டத்தில் பகிர்ந்து, அதை ஒற்றுமை பயணத்துடன் தொடர்புப்படுத்தி பதிவுகள் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் படத்தில் ராகுல் காந்தியுடன் இருக்கும் சிறுமி, ராகுல்காந்தியின் தங்கையான பிரியங்கா வத்ராவின் மகள் மிராயா வத்ரா என அறிய முடிந்தது.

கெட்டி இமேஜஸ் தளத்தில் வைரலாகும் படம், “Congress Vice President Rahul Gandhi with his niece Miraya Vadra during a remembrance ceremony for the 71st birth anniversary of the former Indian Prime Minister Rajiv Gandhi at Veer Bhumi on August 20, 2015 in New Delhi, India. Rajiv Gandhi was assassinated during electoral campaigning, allegedly by Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebel separatists, in the town of Sriperumpudur, in the southern state of Tamil Nadu on May 21, 1991.”  என்று தலைப்பிட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தததை நம்மால் காண முடிந்தது.

ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம் - 04
Screenshot from Getty Images

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம்  கடந்த  2015 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71ஆம் பிறந்தநாள் விழா அவரது நினைவிடத்தில் நடைப்பெற்ற தருணத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகின்றது.  ராகுல்காந்தியின் அருகில் இருக்கும் சிறுமி அவரது மருமகள் மிராயா என்பதையும் அறிய முடிகின்றது.

மேலும் தேடுகையில் ‘Priyanka Vadra’s daughter Miraya makes rare public appearance’ என்று தலைப்பிட்டு டெக்கான் கிரானிக்கல் வெளியிட்ட செய்தியில் இதே நிகழ்வில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தை பயன்படுத்தி இருந்ததை நம்மால் காண முடிந்தது.

ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம் - 05
Screenshot of Deccan Chronicle

Also Read: மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதா?

Conclusion

ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம் 7 வருடங்களுக்கு முந்தியது என்பதும், அச்சிறுமி ராகுல்காந்தியின் தங்கை மகள் என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே இப்படத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை வாசகர்கள் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Getty Images’ image
Deccan Chronicle Article published on Aug 21, 2015


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage