இந்திய பிரதமர் மோடி சவூதி மன்னர் காலில் விழுந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் காலில் பிரதமர் மோடி விழுந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்திய பிரதமர் மோடி சவூதி மன்னர் காலில் விழுந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய இப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
பிரதமர் மோடி கடந்த 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மத்திய பிரதேசத்தில் மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் அத்வானி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்நிகழ்வு குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே மற்றும் இங்கே காணலாம்
பிரதமர் மோடி அத்வானியிடம் ஆசி வாங்கும்போது எடுக்கப்பட்ட படமே எடிட் செய்யப்பட்டு, சவூதி மன்னர் காலில் பிரதமர் விழுந்ததாக பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றாரா பாஜக நிர்மல் குமார்?
Conclusion
இந்திய பிரதமர் மோடி சவூதி மன்னர் காலில் விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் எனபது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Altered Photo
Sources
Article Published by NDTV, Dated 25.10/2013
Article Published by Economic Times, Dated 25.10/2013
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)