Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Uncategorized @ta
பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்துப் புகழ்பெற்றவர் இந்திரஜா சங்கர். இவர் பிக்பாஸ் சீசன் நான்கில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்குப்பெறவிருக்கிறார் என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது பிக்பாஸ் நிகழ்ச்சி.
வெவ்வேறு குணாதிசயம், வெவ்வேறு சூழல்களில் வளர்ந்த மனிதர்களை 100 நாட்களுக்கு ஒரு இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்குள் நடக்கும் விஷயங்களை படம்பிடித்து ஒளிப்பரப்புவதே பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியானது முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிக்பிரதர் எனும் பெயரில் தொடங்கப்பட்டது. பின்பு இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் பரவி, இந்தியாவில் முதன்முறையாக இந்தி மொழியில் 2006 ஆம் தொடங்கப்பட்டது.
இதன்பின் இந்த நிகழ்ச்சியானது கன்னடம், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய ஏழு மொழுகளில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இந்தியாவில் மட்டும் மொத்தம் எட்டு மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
தமிழில் இந்நிகழ்ச்சி முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின் அடுத்தடுத்த வருடங்களில் சீசன் 2, சீசன் 3, சீசன் 4 என வருடம் தவறாமல் கடந்த நான்கு வருடங்களாக இந்நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிழ்ச்சியை மக்கள் நீதிமய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொகுத்து நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடர்ந்து பலக் கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொள்வார்கள். பின்பு சிறிது காலம் கழித்து ‘வைல்ட் கார்ட் என்ட்ரி’ எனும் பெயரில் மேலும் சில போட்டியாளர்கள் கலந்துக்கொள்வார்கள்.
இதேபோல தற்போது நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் நான்கில் முதலில் 16 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர். அதன் பின்பு சிறிது காலம் கழித்து மேலும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களம் இறங்கினர்.
இவர்களைத் தொடர்ந்து பிகில் படத்தில் நடித்து புகழ்பெற்ற இந்திரஜா ஷங்கர் அவர்கள் மற்றொரு வைல்ட்கார்ட் என்ட்ரியாக செல்லவிருக்கிறார் என்றொரு செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் உலவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செகர் தமிழ் சார்பில் இத்தகவலை ஆராய்ந்தோம்.
இந்திரஜா சங்கர் அவர்கள் நேற்று (()4/10/2020) இன்ஸ்டாகிராமில்
“ All I ever wanted was to reach out and touch another human being not just with my hands but with my heart♥️. All great and precious things are lonely✌
என்று ஒட்டல் அறையிலிருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைத் தமிழில் மொழிப்பெயர்த்தால்,
“நான் என் சக மனிதர்களை கைகளால் தொடுவதை விட, மனதால் தொட விரும்புகிறேன். அனைத்து சிறந்த, விலைமதிப்பில்லா விஷயங்களெல்லாம் தனிமையில்தான் கிடைக்கும்”
என்பதே அர்த்தமாக வரும்.
இப்பதிவைக் கண்டே இவர்தான் அடுத்த வைல்ட் கார்ட் போட்டியாளர் என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் இப்பதிவில் பிக்பாஸ் குறித்து எந்த ஒரு கருத்தும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ சொல்லப்படாத பட்சத்தில், இக்கருத்தில் உண்மைத்தன்மை இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஆகவே இதுக்குறித்து நாம் தேடினோம். அப்போது “RD Fitness Unlimited” எனும் யூடியூப் சேனலில், 99 நாட்கள் உடற்பயிற்சி போட்டி ஒன்றை அவர்கள் நடத்தி வருவதாகவும், அதில் இந்திரஜா அவர்கள் கலந்துக் கொண்டிருப்பதாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து இந்திரஜா பிக்பாஸ்க்கு போகவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வீடியோ உங்களுக்காக:
இதைத் தொடர்ந்து இந்திரஜா அவர்களும் இந்நிகழ்வுத் தொடர்பாக மறுப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வெளியிட்டுள்ளார்.
அவ்வீடியோ உங்களுக்காக:
இதன்மூலம் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால், இந்திரஜா சங்கர் பிக்பாஸில் கலந்துக்கொள்ளவிருப்பதாக வந்தச் செய்தி அனைத்தும் முற்றிலும் தவறானது.
இந்திரஜா பிக்பாஸில் கலந்துக்கொள்விருப்பதாக வந்தச்செய்தி முற்றிலும் தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழின் விரிவான ஆய்வின் மூலம் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Twitter https://twitter.com/Bigil_Boss/status/1323907949840879616
RD Fitness Unlimited : https://www.youtube.com/watch?v=VUzEqYQNaYI&feature=youtu.be
Indraja Shankar: https://www.instagram.com/p/CHIS8PsBaFE/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல்முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)